shadow

kocha7-mar9

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் கோச்சடையான் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்  தரப்பு இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மே மாதம் 14ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதை ஒட்டி, தேர்தல் பரபரப்பு எல்லாம் முடிந்த பிறகு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, ஜப்பான், பஞ்சாபி, போஜ்புரி மற்றும் ஆங்கிலம் என 8 மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 3500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. அவதார், டின் டின் படங்களை அடுத்து photorealistic performance capture டெக்னாலஜியில் இந்த படம் உருவாகியிருப்பதால் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply