shadow

14

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக கோச்சடையான் படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று அகமதாபத்தில் திரையிட்டு காண்பிக்க கோச்சடையான் படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்,

சமீபத்தில் சென்னையில் ரஜினிகாந்த்தை சந்தித்த நரேந்திர மோடி, தான் ஒரு ரஜினியின் தீவிர ரசிகர் என்று பத்திரிகையாளர்கள் முன் தெரிவித்தார். தற்போது தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இருப்பதால், ரஜினியின் கோச்சடையான திரைப்படத்தை பார்க்க அவர் காட்டியதாக கூறப்படுகிறது.

நரேந்திர மோடிக்காக சிறப்பு காட்சி ஒன்று அகமதாபாத் திரையரங்கில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த காட்சிக்கு ரஜினிகாந்த் நேரில் செல்லவில்லை என்றாலும், அவருடைய மகளும், கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, மோடியுடன் திரைப்படத்தை பார்க்க இருக்கிறார். மேலும் அன்றைய தினம் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோர்களும் கோச்சடையான் திரைப்படத்தை பார்க்க இருக்கின்றனர். சிறப்புக்காட்சி திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செளந்தர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Leave a Reply