shadow

Kiren Rijiju சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகளை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் ரூ.40000 கோடி ரூபாயில் சாலைகள் உள்பட உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சிக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பகுதியால் பிரச்சினை நீடித்துவருவதால்  இதற்கு தீர்வு காணும் வரை அருணாச்சலத்தில் எந்த பணிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது” என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, “நமது நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு முழு உரிமை உண்டு என்றும் அதை யாரும் தடுக்க முடியாது என்றும், அறிவித்துள்ளார். மேலும் நான்  அருணாச்சல பிரதேசத்தின் மக்கள் மூலம் தேர்வான அமைச்சர். நான் எனது பதவியில் இருக்கும் வரை நமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணிகளை மேற்கொள்ள எனக்கு கடமையும் உரிமையும் உண்டு. அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு சீனாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply