shadow

kiran bediஇந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி என்ற பெயர் பெற்ற கிரண்பேடி தற்போது டெல்லி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பேச்சு மற்றும் செய்கைகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக சென்ற கிரண்பேடி வழியில் இருந்த சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதோடு நின்றிருந்தால் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் தனது கழுத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் பொறித்த துண்டையும் சிலைக்கு அணிவித்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ” ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசியவாத அமைப்பு என்றும் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் பேசியுள்ளார். இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிரண்பேடி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அன்னா ஹசாரெ, ‘கிரண்பேடியின் அழுக்கு படிந்த அரசியல் பற்றியும் பேச விரும்பவில்லை’ என்று கூறிய கருத்தும் கிரண்பேடிக்கு பாதகமாக அமைந்துள்ளது.

Leave a Reply