வடகொரியா கெஞ்சியதால்தான் பேச்சுவார்த்தை நடக்கின்றது! கடுப்பேற்றும் அமெரிக்கா

அணு ஆயுத விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே பகிரங்க மோதல் வெடித்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் திகழும் என்று உறுதி கூறினார்.

இதன்பின்னர் அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *