shadow

புதிய படங்களை பதிவேற்றிய பிரபல இணையதளம் முடக்கம். இங்கல்ல..அமெரிக்காவில்

kickassரஜினியின் ‘கபாலி’ படத்தை இணையத்தில் வெளியிட கூடாது என்று நீதிமன்றமே எச்சரிக்கை செய்துள்ள நிலையிலும் இந்த படத்தை இண்டர்நெட்டில் வெளியிட பல இணையதளங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் பிரபலமாக இயங்கி வரும் கிக் ஆஸ் டாரண்ட்ஸ் என்ற இணையதளம் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என பல வீடியோக்கள் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்ததாக தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து இந்த இணையதளத்தை அமெரிக்க அரசு முடக்கியுள்ளது.

சுமார் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த இணையதளம் திருடியுள்ளதாக இந்த இணையதளத்தின் நிறுவனர் ஆர்டம் வாலின் என்பவர் மீது தகவல் திருட்டு, பண மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலந்து நாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்டம் வாலியின் ஆப்பிள் போன் மற்றும் ஐகிளவுட் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டிபிடித்து, அவரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply