shadow

U.S. Secretary of State Kerry arrives to board a plane to New Delhiபாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி முதல்முறையாக மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு குறித்த ஐந்தாவது கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று மாலை டெல்லி விமானத்தில் வந்திறங்கிய ஜான் பெர்ரிக்கு இந்திய உயரதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஜான் கெர்ரி நேரில் சந்தித்து பேசவுள்ளார்.இந்த பேச்சுவார்த்தையில், எரிசக்தி, பருவநிலை மாற்றம், கல்வி, பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டின் உறவுகளை மேம்படுத்தவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்வார்கள் எனத் தெரிகிறது.

பின்னர் ஜான்கெர்ரி பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். மேலு அவர் இந்தியா-அமெரிக்க உறவு தொடர்பாக டெல்லியில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

Leave a Reply