சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20கிமீ ஒட்டகத்தில் வந்த மணமகன்: கேரளாவில் பரபரப்பு

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இஸ்லாம் சமூகத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஒரு மணமகன், திருமணம் நடக்கும் இடத்திற்கு 20 கிலோமீட்டர் தூரம் ஒட்டகத்தில் வந்து கையில் ’நோ சிஏஏ நோ என்.ஆர்.சி என்ற பதாகையை ஏந்தி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவை சேர்ந்த ஹூசைன் என்பவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இவர் தனக்கு திருமணம் நடக்கும் திருமண மண்டபத்திற்கு 20 கிலோமீட்டர் தூரம் ஒட்டகத்தில் வந்தார். அவரும் அவருடைய நண்பர்களும் கையில் ’வேண்டாம் சிஏஏ என சிஏஏவுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்

திருமணம் செய்யவிருக்கும் மணமகன் இவ்வாறு சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகையுடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் பின்னர் மணமேடைக்கு வந்த மணமகனை மணமகளுக்கு தாலி கட்டியவுடன் கையில் சிஏஏ சட்டத்தின் நகல் ஒன்றையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply