கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் கேரளா!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா தான் என்பது தெரிந்ததே. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் 10 இடங்களில் கேரளா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கேரளாவில் கேரள அரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கை மற்றும் கேரள மக்கள் கொடுத்துவரும் ஒத்துழைப்பு காரணமாக தற்போது கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கேரளாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 55 பேர் குணமாகி உள்ளனர் என்பதும் கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் 178 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் குணமாகி விட்டால் இந்தியாவில் கொரோனா இல்லாத முதல் மாநிலமாக கேரளா விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் கேரள அரசின் சுகாதார உள்கட்டமைப்பு என்று கூறப்படுவது. அதேபோல் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி விரைவாக செயல்பட்டதும், கேரள மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு கொடுத்த ஒத்துழைப்பும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது

Leave a Reply