shadow

aravind_kejerwalடில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேர்தலில் பெற்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், தனக்கு “இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி அந்த பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்தியாவின் தலைநகராக உள்ள டில்லியில் முதல்வர் என்ற முறையில் பொறுப்பேற்கவிருக்கும் ஒருவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் என்ரு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் முதல்வராக பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கு 30 கமாண்டோக்கள் கொண்ட “இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை அளிக்கும்படி டில்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

தற்போது அரவிந்த கெஜ்ரிவால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருவதால் அவருக்கு அந்தமாநில காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்பைப் பிரிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்றால் அந்த பாதுகாப்பை தான் ஏற்கத் தயாராக இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஆசுதோஷ் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்ற போதும் அவர் தனக்கு வழங்கிய “இசட் பிளஸ்’ பாதுகாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குறைந்த எண்ணிக்கையிலான காவல் சீருடை அணிந்த ஆயுதப் படையினரும், சாதாரண உடையில் காவலர்களும் கேஜரிவாலுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply