shadow

விஜய் 60′ படத்தின் நாயகியாகிறார் கீர்த்தி சுரேஷ்
keerthi-suresh1
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘ரஜினிமுருகன்’ படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றியே அவருக்கு விஜய் ஜோடியாக நடிக்கும் பெற்றுத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் 60′ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் இயக்குனர் பரதன் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தனுஷுடன் ‘ரயில்’ என்ற படத்திலும் பாபிசிம்ஹாவுடன் பாம்புச்சட்டை’ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ‘நர்ஸ் அக்கா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Keerthy Suresh to romance Vijay

Leave a Reply