shadow

கீர்த்தி சுரேஷின் மாமியாராகும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நம்பர் ஒன் நாயகியாக இருந்து வரும் நிலையில் தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டியும் அவரது மனைவியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் ராஜசேகர ரெட்டியின் மருமகள் கேரக்டரில் நடிக்க கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த செய்தி உண்மையானால் கீர்த்திசுரேஷின் மாமியாராக நயன்தாரா நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் நடிக்க முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply