shadow

ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ். ஆனால்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ‘தலைவர் 168’ படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளது

இருப்பினும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்றும் மகள் அல்லது மருமகளாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகிய மூவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இவர்களில் மீனாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் வரும் 2020ஆம் ஆண்டு தீபாவளியன்று இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *