shadow

விஜய் 60′ நாயகியின் அடுத்த பட டைட்டில்
keerthi-suresh1
முதல்படமான ‘இது என்ன மாயம்’ சுமாராக ஓடினாலும் இரண்டாவதாக நடித்த ‘ரஜினிமுருகன்’ சூப்பர் ஹிட் ஆனதால் அந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மிகுந்த உற்சாகத்தில் உள்ள நிலையில் விஜய் 60 படத்தின் நாயகியாகவும் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் 60 படத்தின் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்ட கீர்த்தி சுரேஷ், தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்திசுரேஷுக்கு கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளதால் அவர் நடித்த மலையாள படம் ஒன்று ரீமேக் செய்யப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு பிர்யதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த ‘கீதாஞ்சலி என்ற திரைப்படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தமிழில் வெண்ணிலா மின்னலா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Keerthy Suresh in next movie title revealed

Leave a Reply