சியான் விக்ரமின் ‘சாமி 2’ நாயகி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் படபிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக தற்போது கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களை அடுத்து கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகியுள்ள இன்னொரு பெரிய நடிகரின் படம் ‘சாமி 2’ என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ‘சாமி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தாலும், கீர்த்திசுரேஷ் தான் நாயகி என்பதும் இவர்தான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் மித்ரன் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ‘சாமி 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *