shadow

p127

தேவையானவை: கோதுமை மாவு – 200 கிராம், பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை ஒரு கைப்பிடி அளவு, வேகவைத்த உருளைக்கிழங்கு – 4,  எண்ணெய், வெண்ணெய்  தலா – 2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கிக் கீரையை எண்ணெயில் வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, கீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம். உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆல்வல்லி கிழங்கிலும் தயாரிக்கலாம்.


 

Leave a Reply