shadow

kedarnath-trips-photo

குளிர் காலம் துவங்குவதை அடுத்து, பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களின் நடைகள் சாத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான உத்தரகண்ட் மாநிலத்தில், சோட்டா சார் தாம் என்றழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் புனித தலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டும் இந்த கோவில்கள் திறந்திருக்கும்; குளிர் காலத்தில், கோவில்களை பனி சூழ்ந்துவிடும் என்பதால், நடை சாத்தப்படுவது வழக்கம். இதில், கேதார்நாத் சிவன் கோவிலில் உள்ள விக்ரகங்கள் மற்றும் பத்ரிநாத் விஷ்ணு கோவிலில் உள்ள விக்ரகங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடத்தப்படும். இந்நிலையில், குளிர் காலம் துவங்குவதையொட்டி, நவ., 13 முதல், கேதார்நாத் கோவிலும், 17 முதல், பத்ரிநாத் கோவிலும் நடை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேதார்நாத் சிவன் கோவில் பயங்கர வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அங்கு பரிதவித்த லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்; வெள்ளத்தில் சிக்கி, 6,000த்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

Leave a Reply