shadow

அதிமுகவில் இருந்து கே.சி பழனிசாமி நீக்கம் ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து கே.சி பழனிசாமியை நீக்கியது ஏன் என்பது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்கும் என்று முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி கூறியிருந்தார். பாஜகவுக்கு எதிராக பேசியதால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கே.சி பழனிசாமியை நீக்கியது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமுார் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் அடிப்படை விதியை மீறி கொள்கை முடிவு குறித்து கே.சி பழனிசாமி பேசியதால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கே.சி பழனிசாமியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாகவும் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், பத்து நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply