shadow

kayalமைனா, கும்கி, போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கயல் படம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி நினைவு நாளில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது கயல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் ஏற்கனவே மீகாமன், எனக்குள் ஒருவன், இசை, வெள்ளக்கார துரை, கப்பல் ஆகிய மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளதால் கடும்போட்டியை தவிர்ப்பதற்காக பிரபுசாலமன் தனது படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிகிறது.

ஆனந்தி, சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள கயல், படத்தில் இமான் இசையமைத்துள்ளார். இந்த ஏற்கனவே படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னும் ஓரிரு தினங்களில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

Leave a Reply