shadow

அஜித் வழியை பின்பற்றும் மணிரத்னம்

kaatru-veliyidaiகார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதி ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை கார்த்தியும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்காக விரைவில் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் பல்கேரியாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply