katrina-chanபிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்திய, சீனா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு Kung Fu Yoga என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜாக்கிசானுடன் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை காத்ரினா கைப் நடிக்கவுள்ளார். சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் யோகா பேராசிரியராக காத்ரீனா கைப்பும், தொல்பொருள் ஆராய்ச்சியாளராக ஜாக்கிசானும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஜாக்கி சானை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய Stanley Tong என்பவர் இயக்கவுள்ளார். வரலாற்று பின்னணி கொண்ட இந்த படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காத்ரீனா  கைப் நடிக்கவுள்ள முதல் சர்வதேச திரைப்படம் இது என்ற சிறப்பையும் இந்த படம் பெறுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *