shadow

kaththiவிஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி திரைப்படத்தின் தயாரிபாளர் பிரச்சனை குறித்து விளக்கம் அளிப்பதற்காக நேற்று சென்னையில் கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சுபாஷ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களில் சில தொகுப்புகள்.

ராஜபக்சேவுக்கும் எங்கள் நிறுவனத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எங்களுக்கு இலங்கையில் எந்தவித தொழிலும் கிடையாது. எனவே ராஜபக்சேவின் தயவு எங்களுக்கு தேவையில்லை.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவி எங்கள் நிறுவனம் உதவி செய்ய இலங்கை அரசு அனுமதி அளித்ததற்கு எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை.

கத்தி படத்தில் தமிழர்கள் குறித்து எவ்வித கருத்தும், இல்லை.

சில தமிழ் அமைப்புகள் விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவே கத்தி படத்தை எதிர்த்து வருகின்றன.

பணம் சம்பாதிக்க மட்டும் கத்தி படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

விஜய் படத்தில் மட்டும் வசனம் பேசினால் போதும்.கத்தி பட பிரச்சனை குறித்து எதுவும் பேச வேண்டாம்.

எங்கள் நிறுவனத்தின் இரண்டு நாள் வருமானம்தான் கத்தி படத்தின் மொத்த பட்ஜெட்.

கத்தி திட்டமிட்டபடி தீபாவளிக்கு திரைக்கு வரும். யாராலும் தடுக்க முடியாது.

கத்தி படம் குறித்து முதல்வரிடம் பேச விரும்பவில்லை. பிசியாக இருக்கும் அவரை இந்த சின்ன விஷயத்திற்காக சந்திக்க விரும்பவில்லை. இந்த பிரச்சனையை நாங்களே முடித்துகொள்வோம்.

கத்தி படத்தை ரிலீஸ் செய்ய விஜய், முருகதாஸ் உதவி எங்களுக்கு தேவையில்லை.

Leave a Reply