பிரபல நடிகையின் சாபம்?

இந்த கொரோனா பரபரப்பு நேரத்திலும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதி கொண்டு வருகின்றார்கள். இவர்களை திருத்தவே முடியாதா? என்ற கேள்வியே பலரது மனதில் எழுகிறது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்’ என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு அஜித், விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் டுவிட்டர் சமூக வலைத்தளம் பெரும் பரபரப்பில் உள்ளது

Leave a Reply