Chennai Today News

தென்னாப்பிரிக்க சமையல் போட்டி: உலக அளவில் பரிசை வென்ற இந்தியாவின் சமோசா

தென்னாப்பிரிக்க சமையல் போட்டி: உலக அளவில் பரிசை வென்ற இந்தியாவின் சமோசா

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இந்தியாவின் பிரபல திண்பண்டமான சமோசா மற்றும் காஷ்மீரி சில்லி சிக்கன் ரெசிபி முதல் பரிசு பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கான செய்தித்தாள் நிறுவனமானது சமையல் மற்றும் சாப்பிடும் போட்டி ஒன்றை நடத்தியது. இந்த போட்டியில் உலகின் பல சிறந்த உணவுகள் சமைக்கப்பட்டன. பல வகையான சமோசா மற்றும் சிக்கன் ரெசிபிக்கள் செய்தித்தாள் நிறுவனத்திற்கு அனுப்பட்டன.

சாக்லேட் வகைகள் உள்பட பல உணவு வகைகளை பின் தள்ளி விட்டு சல்மா அக்ஜீ என்பவரின் சமோசா ரெசிபி முதல் பரிசை தட்டிச்சென்றது. பஞ்சாபின் பாரம்பரிய திண்பண்டமான சமோசா தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான உணவாகும்.

இது குறித்து சல்மா அக்ஜீ பேசுகையில், ‘இந்த சமோசா ரெசிபி என்னுடையது. அதில் உள்ள சிக்கனில் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் இரண்டு வகையான பாலாடைக்கட்டியை சேர்ப்பேன். அதனால் தான் சமோசா மிகவும் வித்தியாசமானதாக உள்ளது’ என அவர் கூறினார்.

மேலும், செய்தி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மற்றொரு போட்டியில் 63 வயதான பாட்டி ரோக்சனா நசீம் 10 சமோசாக்களை 60 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் செய்து முதல் பரிசை தட்டிச்சென்றார். உணவு சாப்பிடும் போட்டியில் 10 சமோக்களை 1 நிமிடத்தில் சாப்பிட்டு ‘வேகமாக சமோசா சாப்பிடுபவர்’ என்ற பட்டத்தை 18 வயது வாலிபர் தட்டிச்சென்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!