shadow

இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பதில் என்ன?

1நேற்று இந்திய எல்லை பகுதியில் ஊடுருவி இருந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் சிறப்பு படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான தீவிரவாதிகள் உயிர் இழந்திருக்கலாம் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியூகத் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அளித்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளது இந்தியா. ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காக நடக்காத தாக்குதலை நடந்ததாக ஜோடித்துள்ளது. இந்தியா சொல்வதுபோல் ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அதற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் வான்வெளி எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், “இந்திய தரப்பில் சிறிய ரக ஆயுதங்களே பயன்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 வீரர்கள் காயமடைந்துள்ளனர்” என்றார்.

இதற்கிடையில், அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள்.

பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply