அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தூதராக நேற்று மாலை குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியுடன் திடீரென சந்தித்த நிகழ்ச்சி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியது. திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். ஆனாலும் கனிமொழி ராஜ்யசபா தேர்தலில் நின்ற போது காங்கிரஸ் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த கருணாநிதி, காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சோனியா காந்தியின் தூதராக குலாம் நபி ஆசாத் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலுவும் உடனிருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்தும், இந்த கூட்டணியில் தேமுதிக கட்சியை சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.

Leave a Reply