shadow

கருணாநிதி எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பது இப்போது புரிகிறதா?

திமுக தலைவர் கருணாநிதி 90 வயதை தாண்டிய போதிலும் 60 வயதை தாண்டிய மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் விட்டு கொடுக்காமல் கட்டி காத்து வந்தது ஏன் என்பது இப்போது அனைவருக்கும் புரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங், தனது மகன் அகிலேஷ் யாதவுக்கு 38 வயதிலேயே முதல்வர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அவரை ஒப்பிட்டு கருணாநிதியை அனைவரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால் தற்போது தந்தைக்கும் மகனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியே உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான் கருணாநிதி தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கவோ அல்லது முழுமையாக அளிக்கவோ ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ராஜதந்திரம் கருணாநிதியிடம் இருப்பது உண்மைதான் என்பதை திமுகவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply