shadow

குஜராத் ஐகோர்ட் தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு

karunanidhiஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என இரு பிரிவுகளாக இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பொருளாதார் அடிப்படையிலான இஅ ஒதுக்கீடுகளுக்கு செல்லாது என குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்து ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக பொருளாதார அடிப்படையிலும் இட ஒதுக்கீடு என்பதை திமுக எப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

உயர் வகுப்பிலுள்ள வசதியற்றவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று குஜராத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் செல்லாது என்றும், அரசியல் சட்ட விரோதம் என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் கூறியிருப்பது நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்கள் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அமைந்திருக்கும் சரியான தீர்ப்பாகும்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

Leave a Reply