dmkதி.மு.க. தலைவராக கருணாநிதி 11வது முறையாக வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே தலைவர், பொதுச் செயலாளர், பொருளார் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதன்முதலாக திமுக தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர். 1974ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், 1978ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு  நான்காவது முறையாகவும், 1988ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகவும், 1992ஆம் ஆண்டு ஆறாவது முறையாகவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997ஆம் ஆண்டு  ஏழாவது முறையாகவும், 2000ஆம் ஆண்டு  எட்டாவது முறையாவும், 2003ஆம் ஆண்டு ஒன்பதாவது முறையாகவும், 2008ஆம் ஆண்டு  பத்தாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று 11வது முறையாக தற்போது தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றோடு கருணாநிதி தலைவராக பதவியேற்று சரியாக 45 ஆண்டுகள் 6 மாதங்கள் 23 நாட்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *