shadow

கார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் மேலும் 3 நாள் நீதிமன்ற காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்
3வது முறையாக அவருக்கு காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்ட அவருக்கு முதலில் 1 நாள் நீதிமன்ற காவலும் அதனைத் தொடா்ந்து 5 நாள் நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவா் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டார்.. சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தின் போது கூறுகையில், கார்த்திக் சிதம்பரம் எந்த கேள்விக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் அவா் ஒழுங்காக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் உங்கள் பெயா் என்னவென்று கேட்டால் நான் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதுடன். ஒருமுறை கேட்ட கேள்வியை மீண்டும் எழுப்பினால் முரண்பாடான பதிலை அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடா்ந்து சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் மட்டும் கார்த்திக் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

Leave a Reply