shadow

kombanமெட்ராஸ் பட வெற்றியை அடுத்து கார்த்தி நடித்து கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘கொம்பன். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக முதன்முதலில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. குட்டிப்புலி என்ற படத்தை இயக்கிய முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் பருத்திவீரன் படத்திற்கு பின்னர் கார்த்தி பெரிய மீசை வேட்டி, சட்டையுடன் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் சாதி பற்றி சர்ச்சை வசனங்கள் இருப்பதாக தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன. சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சிகளும் ஜாதி அமைப்புகளும் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது, ‘கொம்பன்’ படத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வசனங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஜாதியினரை உயர்வாகவும் சிறுபான்மை மக்களை தாழ்த்தியும் வசனம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்து இருப்பது தவறானது. எனவே மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கை குழுவிடம் வற்புறுத்த உள்ளோம் என்றார்.

Leave a Reply