shadow

அட்லியின் அடுத்த நாயகன் கார்த்தி
karthi
அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணி’ படத்தில் ஆர்யா நாயகனாக நடித்த நிலையில் அவருடைய இரண்டாவது படமான ‘தெறி’யில் இளையதளபதி விஜய் நடித்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்றதால் அவருடைய அடுத்த பட நாயகன் யார்? என்ற கேள்வி கோலிவுட்டில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது.

இந்நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் இந்த படமும் தெறியை போலவே அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி தற்போது ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் மணிரத்னம் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பின்னர் அவர் அட்லி படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply