shadow

சதுரங்க வேட்டை 2’வில் கார்த்தி

karthiவிஜய் நடித்த ‘புலி’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி தற்போது ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் சதுரங்க வேட்டை 2′ ஆரம்பமாகும் என தெரிகிறது.

முதல் படம் போலவே இந்த படமும் ஒரு பொருளாதார குற்றங்கள் குறித்த கதை என்றும் இந்த படத்தின் திரைக்கதையின் இறுதி வடிவத்தை அமைப்பதில் வினோத் தீவிர முயற்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply