சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க திடீர் தடை

sania mirzaநாளை மறுநாள் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று சானியா மிர்சாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை அளிக்கவிருந்த நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்த விருதை சானியா மிர்சாவுக்கு வழங்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2014ஆம் ஆண்டு இன்ச்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற கிரிஷா என்ற விளையாட்டு வீராங்கனை, கேல் ரத்னா விருது புள்ளிகள் அடிப்படையில் தனக்கே வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இதுகுறித்து கிரிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் விளையாட்டுத் திறன் அடிப்படையிலான புள்ளிகள் முறையின் படி 90 புள்ளிகள் பெற்ற நானே கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், இந்த அடிப்படையில் சானியா மிர்சா டாப் நிலைகளில் எங்குமே இல்லை.

சானியா கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன், ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், 2011-ம் ஆண்டு முதலான உலக சாம்பியன்ஷிப் ஆகிய விளையாட்டுப் போட்டிகளிள் திறமையை வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே விருதுக்காக பரிசீலிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *