ஒரே தவணையில் ரூ.9000 கோடி கட்ட தயார். விஜய் மல்லையா அறிவிப்பு

இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பிடியாணைகள் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில்  விஜய் மல்லையா தனது டுவிட்டரில் தான் இந்திய வங்கிகளில் வாங்கியிருந்த மொத்த கடனையும் ஒரே தவணையில் செலுத்த தயார் என்றும் தன்மீதுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்படும் என்றும் சட்டப்படி அவர் மீது விசாரணை நடந்தே தீரும் இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிராக நேற்று மீண்டும் ஒரு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.. கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை அடுத்து அவரை ஜூன் 1-ந் தேதிக்குள் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *