‘காலா’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக தலைவர்

ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில பாஜகவின் முக்கிய தலலிவர் ஈஸ்வரப்பா ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்

இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறியபோது, ‘நடிகர்கள் அரசியல் உள்ளிட்ட எந்த துறையில் இருந்தாலும் கலைஞர்கள் இந்த நாட்டின் சொத்து. அவர்கள் ஒரு மொழிக்கோ, பிராந்தியத்துக்கோ மட்டும் உட்பட்டவர்கள் அல்ல.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் இந்த கர்நாடக மாநில மக்களுக்கு மட்டுமே சொந்தக்காரராக இருந்ததில்லை. நாட்டின் பல பகுதிகளில் பல விருதுகளை அவர் பெற்றுள்ளர். எனவே, கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எப்போதுமே ஒட்டுமொத்த நாட்டுக்குமே சொந்தமானவர்கள்தான்

எனவே ‘காலா’ படத்தின் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஈஸ்வரப்பா தெரிவித்தார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *