பாகிஸ்தானில் இருந்து பிரிய விரும்பும் முக்கிய நகரம்

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலூச் மாகாணம் அந்நாட்டில் இருந்து பிரிய கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியும் பிரிய முயற்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பாகிஸ்தான் அரசால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வளர்ச்சி திட்டங்கள் எதுவும் தங்களது பகுதியில் இடம் பெறுவது இல்லை என்றும் பலுசிஸ்தான் என்ற நாடாக தனியாக பிரிய வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் #FreeKarachi என்ற வாசகங்களுடன் பல டாக்ஸிகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அணிவகுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பலுசிஸ்தான், கராச்சி ஆகிய இரண்டும் பாகிஸ்தானில் இருந்து பிரிந்தால் அந்நாட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் இதுகுறித்து பாகிஸ்தான் உயரதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *