கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திய பின்னணியை மையமாக வைத்து தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

கடந்த  2000 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை அவருடைய பண்ணை வீட்டில் இருந்து கடத்தி சில கோரிக்கைகளை விடுத்தான். அதன்பின்னர் 108 நாட்களுக்குப் பின் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். இதை மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் கிட்நாப்’ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு த்ரில்லிங் படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில்க மிஷனர் விஜயகுமார் வேடத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார். வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரை அவர்களிடம் இருந்து எப்படி மகேஷ்பாபு மீட்டு வந்தார் என்பதை த்ரில்லிங்குடன் படமாக்கப்பட்டுள்ளதாக இதன் இயக்குனர் ஏ.சுஷாந்த்ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஆதர்ஷ், பூபால், பூனக்கெளர், சாரதாதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல்மாதம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *