ராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்!

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியபோது, ‘“மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் நினைவிருக்கிறதா? இதனால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இது ரேப் இன் இந்தியாவாக மாறியுள்ளது” என்று கூறினார். இதற்கு நேற்று பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் ஆவேசமாக பதிலளித்தனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் இதுகுறித்து கனிமொழி கூறியதாவது:

மேக் இன் இந்தியா திட்டம் பற்றி பிரதமர் எப்போதும் பேசி வருகிறார். அதை நாங்கள் மதிக்கிறோம். மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இந்தியா வலுவான பொருளாதாரமாக மாற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், நாட்டில் நடப்பது என்ன? அதைதான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மேக் இன் இந்தியாவுக்கு பதிலாக துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றுதான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இது நாட்டைப் பற்றிய அவரது கவலை. இதில் என்ன தவறிருக்கிறது?” என்று கனிமொழி பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி இந்தியாவில் பெண்களை வன்புணர்வு செய்யுங்கள் என்று அழைக்கிறார். நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்திய பெண்களை வந்து வன்புணர்வு செய்யுங்கள் என்று அழைக்கிறார், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

Leave a Reply