shadow

நள்ளிரவில் தீம்பார்க்கில் சுற்றிய கமல்-த்ரிஷா?

thoongavanamஉத்தம வில்லன், பாபநாசம் படங்களை அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள EVP தீம் பார்க்கில் முகாமிட்டுள்ளனர். இந்த தீம் பார்க்கில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், இத்துடன் கிட்டத்தட்ட படத்தின் மொத்த படப்பிடிப்பே முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

பகலில் தீம் பார்க்கில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால், இந்த தீம்பார்க்கில் இரவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் த்ரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply