shadow

uthamaஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படமான ‘ஐ’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று கமல்ஹாசனின் உத்தம வில்லன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஊரெங்கும் ஷங்கரின் ‘ஐ’ டிரண்ட் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த டிரெண்டை திசைதிருப்ப கமல் தந்திரம் செய்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

கமல்ஹாசனின் உத்தம வில்லன் டிரைலர் பொங்கல் தினத்தில்தான் வெளியாக இருந்தது. ஆனால் பொங்கல் தினத்தில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு உள்பட ஒருசில படங்களின் டிரைலர் வெளிவர இருப்பதால் அந்த நேரத்தில் உத்தம வில்லனின் டிரைலர் வெளிவந்தால் பத்தோடு பதினொன்று ஆகிவிடும் என்ற நிலைமை ஏற்படும் என்று யோசித்துள்ள கமல் இன்றே தனது உத்தம வில்லன் படத்தின் டிரைலரை வெளியிட்டுவிட்டார்

ஆனால் உத்தம வில்லன் டிரைலர் இணையத்தில் லீக் ஆனதாக முதலில் செய்தி வெளிவந்தது. ஆனால் இந்த டிரைலர் லீக் இல்லை, கமல் அதிகாரபூர்வமாக தனது ஃபேஸ்புக் தளத்தில் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார் என்பதே உண்மை.

ஷங்கரின் ‘ஐ’ டிரண்டை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகவே திட்டம் போட்டு கமல் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply