shadow

அஜீத்தை ஒதுக்கிவிட்டு கமலை கைப்பிடித்த விக்ரம்

vikramதற்போது கோலிவுட்டில் தயாராகும் பல திரைப்படங்கள் அந்த படத்தின் ஹீரோவை நம்பி எடுக்கப்படுகின்றதோ இல்லையோ ‘தல’ அஜீத்தை நம்பித்தான் எடுக்கப்படுகின்றது. அந்த படத்தின் ஏதாவது ஒரு பாடலிலோ அல்லது ஒருசில காட்சிகளிலோ அஜீத்தை காட்டியே படத்தை ஓட்டும் டெக்னிக்கை பல இயக்குனர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக சிம்புவின் ‘வாலு’, மற்றும் ஆர்யாவின் ‘யட்சன்’ போன்ற படங்களை சொல்லலாம்.

இந்நிலையில் அனைவரும் ‘தல’ மற்றும் ‘தளபதி’யை நோக்கி செல்லும் நிலையில் நடிகர் விக்ரம் மட்டும் வித்தியாசமாக தனது “10 எண்றதுக்குள்ள’ படத்தில் கமல்ஹாசனை புகழ்ந்து ஒரு பாடலில் பாடியுள்ளார். இந்த படத்தில்  இடம்பெற்றுள்ள ‘பேரக்கேட்டா பேஜாரு பண்றே’ என்று தொடங்கும் ஒரு பாடலில், “ஜேம்ஸ்பாண்டு, விராட்கோலி ஆகியோரைப் பற்றிய பெருமைகரளச் சொல்லிவிட்டு மூன்றவதாக கமல்ஹாசனின் பெருமைகளைப் பேசியிருக்கிறார்கள். அந்த பாடல் வரிகள் இதுதான்:

என் ஊரு பரமக்குடி, நான் யாரு கண்டுபிடி,
முத்தவித்தை அத்துப்படி, எங்கிட்ட கத்துக்கடி,
படிப்புக்குப் போகல டியூசன், ஆனா நடிப்புல நானொரு ஓசன்,
புதுமைகள்தான் என் பேஷன், என்னோட பேரு ஹாசன், கமல்ஹாசன்

என்று கமலைப் புகழ்ந்து பாடல்வரிகள் இருக்கின்றன. அஜித், விஜய்க்கு பதிலாக விக்ரம், கமல்ஹாசனை புகழ்ந்து பாடி கைதட்டல் பெற முடிவு செய்திருப்பது உண்மையில் வித்தியாசமாக இருப்பதாக கோலிவுட்டில் கூறுகின்றனர்.

Leave a Reply