shadow

சிவாஜிக்கு சிலை வைப்பாரா கமல்?

நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு வருடங்களாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியையும் சரியாக செய்யவில்லை. அவரது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய இரு படங்களும் எந்த வருடம் வெளியாகும் என்று அவருக்கே தெரியாது. இதில் ‘தலைவன் இருக்கிறான்’ என இன்னொரு படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதையும் உடனுக்குடன் தனது டுவிட்டரில் அப்டேட் செய்யும் கமல்ஹாசன், நேற்று முன் தினம் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு நேற்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா’ என்று கூறியுள்ளார். நல்லவேளை இந்த டுவீட்டாவது அனைவருக்கும் புரியும்படி போட்டாரே என்று நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது.

இனியொரு சிலை செய்வோம் என்று கூறியதால் அவரது ரசிகர்கள் சிவாஜிக்கு கமல்ஹாசன் தனது சொந்த செலவில் சிலை வைப்பார் என்று டுவிட்டரில் கூறி வருகின்றனர். ஏற்கனவே பாலசந்தருக்கு சிலை வைக்க கமல் நினைத்திருந்தார். ஆனால் அதற்கு முன் வைரமுத்து வைத்துவிட்டதால் தனது திட்டத்தை கைவிட்டார். இனி சிவாஜிக்கு சிலை வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply