shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கமல் போட்டியிடுவாரா?

கடந்த சில மாதங்களாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல்ஹாசன், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

கமல் இன்னும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அவரை வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு அனுப்புவது தங்கள் பொறுப்பு என்றும் டுவிட்டரில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் கமல் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply