shadow

பஸ் கட்டண உயர்வுக்கு கமல் டுவிட்டரில் கண்டனம்

சமீபத்தில் தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையான பாதிப்பை அடைந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இதனை எதிர்த்து போராட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும் – @ikamalhaasan * முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம் – கமல். * முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே- என்று கமல் கூறியுள்ளார்

இருப்பினும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி நான்கு நாட்கள் கழித்து வெளியிட்டுள்ள இந்த கருத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவே தெரிகிறது. மேலும் நெட்டிசன்களும் அவரது கருத்தை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply