shadow

uthama-villaina-movie-new-stills-1கமல்ஹாசன் தற்போது உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை முடித்துவிட்டு அந்த படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறார்.

இந்நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த இசை விழாவில் திரையுலகில் சாதனை படைத்த, தன்னுடன் நடித்த கோலிவுட் வில்லன்கள் அனைவரையும் விழாவுக்கு அழைத்து கெளரவப்படுத்த அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, இயக்குனர் திலகம் கே.பாலசந்தர், மற்றும் பலர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply