shadow

கமலுடன் ரஜினி இணைய தேவையில்லை, ரஜினியுடன் தான் கமல் இணைய வேண்டும்: தமிழருவி மணியன்

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவது குறித்து பேசி கொண்டிருந்தலும் உறுதியாக வருவார்களா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமலும், ‘காலா’ படத்திற்காக ரஜினியும் ஸ்டண்ட் அடிப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி விரும்பினால் எனது அணியில் இணைத்து கொள்ள தயார் என்று கமல் சமீபத்தில் கூறினார். இதுகுறித்து கருத்து கூறியுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், கமலுடன் ரஜினி இணைய தேவையில்லை என்றும் ரஜினியுடன் தான் கமல் இணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்

யாரோடு யார் இணைந்தால் என்ன? மொத்தத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற கோணத்தில் சிந்திக்காமல், இவருடன் தான் அவர் இணைய வேண்டும் என்று இப்போதே பிரிவினையை உண்டாக்குவது சரியா? என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

Leave a Reply