Chennai Today News

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்: கமல்ஹாசன் அழைப்பு

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்: கமல்ஹாசன் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை விஷயத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில் தற்போது அந்த கட்சியில் பிரபலங்களை இணைக்கவும் முடிவு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் விஜய் உள்பட ஒருசில பெரிய நடிகர்களுக்கும் அவர் தனது கட்சியில் சேர வலைவீசியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த கமல்ஹாசன், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்த தம்பி என்றும், தனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி எனவும், அரசியலுக்கு அவர் வந்தால் கண்டிப்பாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!