அஜீத்-விஜய்யை ஒன்றாக இணைத்து வைத்த கமல்?
thoongavanam
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ATMUS Entertainment நிறுவனம் அடுத்ததாக கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் GK Media USA’ என்ற நிறுவனமும் இணைந்து ‘தூங்காவனம்’ படத்தை வெளியிடுகிறது. GK Media USA’ நிறுவனம் அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தை அதே தினத்தில் அமெரிக்காவில் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தையும், அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தையும் தனித்தனியாக வெளியிடும் இந்த இரண்டு நிறுவனங்கள் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்திற்காக இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தனித்தனியாக வெளியிடும்போதே அமெரிக்காவின் பல தியேட்டர்களை வளைத்து போட்ட இந்த நிறுவனங்கள் தற்போது ஒன்று சேர்ந்துள்ளதால் அமெரிக்காவின் முக்கிய தியேட்டர்கள் அனைத்தும் இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *