ஜாதியை ஒழிக்க கமல் கூறிய ஐடியாவுக்கு நெட்டிசன்கள் கிண்டல்
கமல்ஹாசனின் இந்த தற்பெருமை கருத்து பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. ஜாதியை ஒழிக்க கமல் வேண்டுமானால் ஜாதி பெயரை பள்ளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் , பல பேட்டிகளில் தான் இந்த ஜாதி என்று பெருமையாக கூறியுள்ளார். ஜாதி பெயரை குழந்தைகளுக்கே தெரியாமல் வளர்த்தால் தான் ஜாதி ஒழியுமே தவிர பள்ளியில் கூறாமல் இருந்தால் மட்டும் ஜாதி ஒழிந்திடாது என்று கமல்ஹாசனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.